மாண்டஸ் புயல்: ரெட் அலர்ட், லீவு, புஸ்ஸாகும் வாய்ப்பு… வெதர்மேன் போட்ட கலகல அப்டேட்!

எப்படா மழை வரும்? என்று தமிழக மக்கள் கண்கொத்தி பாம்பாக கவனிக்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது. ஏனெனில் இது வடகிழக்கு பருவமழை காலம். ஆனால் கடந்த 3 வாரங்களுக்கு மேல் மழையில்லை. என்ன இதெல்லாம்? என்று நடிகர் வடிவேலு காமெடி போல கேட்க தோன்றுகிறது. இந்நிலையில் இதோ வந்துட்டான்யா… வந்துட்டான்யா… என்று சொல்வது போல சூப்பர் அப்டேட் வந்திருக்கிறது.

புதிய புயல் உருவாகிறது

கடந்த இரண்டு முறையை போல் வெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி மட்டுமல்ல. இந்த வாட்டி புயலே வரப் போகிறது. அதுவும் நம்ம வங்க கடலில் தான். வழக்கமாக புயலுக்கு பெயர் வைப்பார்களே? இந்த வாட்டி என்ன பெயர்? எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறது? அதற்கு என்ன பெயர்? என்றெல்லாம் கேட்பதை தவிர்க்க முடியவில்லை. இனி விஷயத்திற்கு வருவோம்.

’மாண்டஸ்’னா என்ன அர்த்தம்?

நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அந்தமான் கடல்பகுதி அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறி தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் உருவானால் அதற்கு ’மாண்டஸ்’ எனப் பெயர் வைக்கவுள்ளனர்.

கனமழை வாய்ப்பு

இது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தழுவி வந்துள்ளது. இதன் பொருள் புதையல் பெட்டி ஆகும். இந்த புயல் வரும் 8ஆம் தேதி தமிழகத்தில் கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. இதையொட்டி 8ஆம் தேதி முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெதர்மேன் கலகல அப்டேட்

குறிப்பாக 8ஆம் தேதி 13 மாவட்டங்களுக்கும், 9ஆம் தேதி 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கலகல அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்டேட் தெரியும். அதென்ன கலகல அப்டேட் என்று கேட்கிறீர்களா? இதோ நீங்களே பாருங்கள். மாண்டஸ் அப்டேட் என்ற பெயரில் ட்ரெண்டிங்கான விஷயங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

1)
கவ்வும் இடம் – வட தமிழக கடலோரப் பகுதி (கடலூருக்கும் புலிகேட்டிற்கும் இடையில்)

2)
மழைப்பொழிவு இடங்கள் – நாகை டூ வட தமிழகம் (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு) டூ நெல்லூர்

3)
மழை புஸ்ஸாகும் வாய்ப்பு – 1 முதல் 10 சதவீதம்

4)
வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் வாய்ப்பு – 80 முதல் 90 சதவீதம்

5)
காற்றின் வேகம் – ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டூ உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் (மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர்)

6)
மாண்டஸ் புயலின் எதிரிகள் – கரை பக்கத்தில் வறண்ட காற்று, காற்றின் வேக மாறுபாடு, நியூஸ் சேனல் பிரேக்கிங் நியூஸ், ப்ளாக்கர்ஸ் சூனியம். அதேசமயம் நடுக்கடலில் எதிரிகள் யாருமில்லை.

7)
நண்பேன்டா – கடல் வெப்ப அலை

8)
டெல்டா – மாண்டஸ் புயல் டெல்டாவிலும் கரையை கடக்க வாய்ப்புள்ளது

9)
புயல் பாதிப்பு ஏற்படும் தேதி – 8 முதல் 11ஆம் தேதி வரை

10)
ஸ்கூல் லீவு வாய்ப்பு – 8 முதல் 11 வரை (ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.