உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் நொக் அவுட் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட குரேஷ்யா அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தமையினால் பெனால்டி உதை மூலம் வெற்றி உறுதி செய்யப்பட்டது. அதற்கிணங்க 3 இற்கு ஒன்று என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றி பெற்றுள்ளது.
இன்று அதிகாலை நடந்த மற்றுமொரு போட்டியில் தென் கொரிய அணியை எதிர்கொண்ட பிறேசில் அணி நான்கிற்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.