தங்க நாணயம் தரும் ஏ.டி.எம்., ஹைதராபாதில் அறிமுகம்| Dinamalar

ஹைதராபாத் தெலுங்கானாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தங்கக்காசுகள் வழங்கும் ஏ.டி.எம்., இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.

வங்கிகள் தற்போது நிறுவியுள்ள ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி இயந்திரங்கள் வாயிலாக, எந்த நேரத்திலும் பணம் பெறுகிறோம்.

3,000 இயந்திரங்கள்

இதேபோல, வங்கிகள் வழங்கும் ‘டெபிட்’ மற்றும் ‘கிரெடிட்’ கார்டுகளை பயன்படுத்தி, தங்க நாணயங்கள் பெறும் ஏ.டி.எம்., இயந்திரத்தை, தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் முதல் இயந்திரம் ஹைதராபாதின் பேகம்பேட் என்ற இடத்தில் நேற்று முன் தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல நாடு முழுதும் 3,000 இயந்திரங்களை நிறுவ இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் இருந்து அரை கிராம், 1, 2, 5 கிராம்களில் தங்க நாணயங்களை பெற்றுக் கொள்ளலாம்.

கடன் அட்டை

மேலும், 10, 20, 50 மற்றும் 100 கிராம் நாணயங்களும் பெறலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.நம் வங்கி அட்டை அல்லது கடன் அட்டையை, இந்த இயந்திரத்தில் செலுத்தி, நமக்கு தேவையான தங்க நாணயத்தின் அளவைக் குறிப்பிட்டால், அன்றைய நாளின் தங்க விலைக்கேற்ப தொகையை எடுத்துக் கொண்டு, தங்கநாணயத்தை தரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.