பாஜக –
கட்சிகளிடையே கருத்து மோதலையும் தாண்டி பெண்களை மையப்படுத்தி விமர்சித்துக்கொள்வது வழக்கமாகியுள்ளது. சமூக ஊடகங்களில் மட்டுமின்றி மேடையிலேயே கொச்சையாக பேசி வருகின்றனர். கட்சிகளின் நிர்வாகிகள் இவ்வாறு பேசி வருவதை தலைமை கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. அண்மையில் திருச்சி சூர்யா பேசி வெளிவந்த ஆடியோ காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு இருந்தது.
கட்சியின் பெண் நிர்வாகியை பெண்ணுறுப்பை அறுப்பேன் என்று திருச்சி சூர்யா பேசியதற்கு கட்சி தலைவர் அண்ணாமலை கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. எதற்காக அண்ணாமலை சமரசம் செய்துகொண்டார் என்று தெரியவில்லை.
இந்த நிலையில், திருச்சி சூர்யாவும் திமுக நிர்வாகி ராஜீவ் காந்தியும் ட்விட்டரில் மாறி மாறி விமர்சித்துக்கொண்டனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து ராஜீவ் காந்தி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், ” தட் கரடியே காரி துப்பிய மொமெண்ட்.. முன்னாள் அதிகாரி அண்ணாமலை உங்கள் கனவு, ஆசை எல்லாம் சினிமாவை சுத்தியே இருக்குதாமே.. நான் சொல்ல சு.சாமி சொல்லுது!! நடிகை வாசுகிட்டே 1000 ரூபா கொடுத்து திமுகவை திட்ட சொன்னப்பவே தெரியும் எல்லாம் பில்டப்பு தானு..
பாஜகவே ஒரு நாடக கம்பெனிதானு.. என இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்துள்ள திருச்சி சூர்யா, அப்படியே வச்சுக்கோ , ஆனா உங்களை மாதிரி நடிகைகளையே வெச்சிக்கிற கம்பெனி கிடையாது பா . புரியவில்லை என்றால் போய் உங்க சின்னவர் கிட்ட கேளு” என்று பதிவிட்டுள்ளார். நடிகைகளை வைத்து பாஜக கட்சியை வளர்க்கிறது என்று திமுக நிர்வாகிகள் விமர்சிக்கின்றனர். அதேபோல, நடிகைகளை வெச்சிக்கிற கம்பெனி என்று திமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிக்கின்றனர். இது போன்ற பேச்சுக்கள் இரு கட்சிகளுக்கும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் பேசிய நிர்வாகி சைதை சாதிக் பாஜகவினரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக பா.ஜ.கவிலுள்ள குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கௌதமி ஆகிய நால்வர் குறித்து தகாத வார்த்தையில் பேசி விமர்சனம் செய்தார். இரட்டை அர்த்தங்களை கொண்டு நடிகை குஷ்பூவை சாடினார். இதற்கு திமுக எம்பி
பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்சி பெண்களை விமர்சிப்பது திமுகவுக்கு வாடிக்கையாகிவிட்ட நிலையில் சொந்த கட்சியில் இருக்கும் பெண்களையே கொச்சைப்படுத்துவது திருச்சி சூர்யாவுக்கு கை வந்த கலையாகிவிட்டது.