தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்று தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது.
இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று, இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் படி, புதிதாக உருவாக்கக்கூடிய இந்த புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகின்ற எட்டாம் தேதி காலை இது புயல் சின்னமாக மாறி, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கரையை நெருங்கும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை ஒட்டி இந்த புயல் மையம் கொள்ளும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.