எவிக்சனுக்கு பின் ராபர்ட் மாஸ்டரை முதலில் சந்தித்த குயின்சி!
பிக்பாஸ் சீசன் 6ல் அடுத்தடுத்த எவிக்சனில் அப்பாவும் மகளும் வெளியேறியுள்ளனர். அதாவது பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவை தனது காதலி என கூறி சுற்றி திரிந்த ராபர்ட் மாஸ்டர் அவரை தவிர மற்ற அனைவரையும் மகள், சகோதரி என்றே பழகி வந்தார். அதிலும், பிக்பாஸ் வீட்டில் குயின்சியை தனது மகளாகவே தத்து எடுத்துவிட்டார். இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முந்தைய எவிக்சனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருந்தார். கடந்தவார எவிக்சனில் குயின்சி வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குயின்சி முதல் வேலையாக தனது பிக்பாஸ் அப்பாவான ராபர்ட் மாஸ்டரை தான் முதலில் சென்று சந்தித்துள்ளார். அப்போது அவர் மாஸ்டருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில் ராபர்ட் – குயின்சிக்கு இடையேயான தந்தை மகள் பாசத்தை பலரும் சிலாகித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.