மதுரை : மணல் கொள்ளையை தடுக்க டாஸ்மாக் போன்று, மணல் விற்பனைக்கு தமிழ்நாடு மணல் கழகம் தொடங்கக் கோரிய வழக்கில் மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.