உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் கத்தாரில் மது விற்பனை தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாக அங்கு வந்துள்ள பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பாக உணர்ந்தேன்
இது குறித்து இங்கிலாந்து ரசிகை எல்லி மொலோசன் கூறுகையில், பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக இருக்கும் என எதிர்பார்த்தேன், பாதுகாப்பாக இருப்பேன் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் பயணம் செய்து வந்துள்ள ஒரு பெண் ரசிகையாக நான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன்.
மதுபான விற்பனை பாலியல் துன்புறுத்தல் போன்ற விடயங்களுக்கு பங்களிக்கும், ஆனால் அதன் விற்பனை கட்டுபாடுகள் அது போன்ற பிரச்சனை ஏற்படுவதை தடுத்துள்ளது என கூறினார்.
REUTERS/Fabrizio Bensch
மதுபானம்
அர்ஜெண்டினா ரசிகை அரினா கோல்ட் கூறுகையில், நான் கால்பந்தை மிகவும் விரும்புகிறேன், நான் என் நாட்டில் இருந்தபோது இது (கத்தார்) ஆண்களுக்கான பகுதி என்று நினைத்தேன். ஆனால் இல்லை, நான் மிகவும் வசதியாக இருக்கிறேன். இங்கே மிகவும் நன்றாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
கத்தாரில் உள்ள சில பார்கள் மற்றும் ஹொட்டல்களில் மதுபானம் கிடைக்கிறது, ஆனால் உலகின் மிகப்பெரிய கால்பந்து போட்டிகள் என்ற நிலையிலும் குறைவாக விற்கப்படுகிறது.
மதுபானம் இல்லாத நிலையில் இது மிகவும் நல்ல சூழ்நிலையாக இருக்கிறது என்று இங்கிலாந்து ரசிகர் எம்மா ஸ்மித் கூறினார்.
REUTERS/Fabrizio Bensch