மகளின் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு தந்தை செய்த சம்பவம்.. அதிர்ச்சி தந்த ஆச்சரியம்

மொராதாபாத்: உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. இந்திய திருமண முறைப்படி மாப்பிளையை குதிரை வண்டியில் உட்கார வைத்து குடை பிடித்து பட்டாசு வெடிவெடிக்க பூ மழை பொழிய திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கோ அல்லது தாலி கட்டும் மேடையை நோக்கி அழைத்து செல்வது வழக்கம். ஆனால், இங்கே, திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு, தந்தை தனது மகளை மேளம் தாளம் முழங்க மணமகனை அழைத்து செல்வது போல மகளையும் குதிரையில் உட்கார வைத்து ஊர்வலம் சென்றுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமடைந்தனர். மகன்களைப் போல மகள்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதற்காக தான், மாப்பிளையை போல தனது மகளையும் குதிரை வண்டியில் உட்கார வைத்து ஊர்வலம் வந்ததாகக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.