டெல்லி: 2022ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பட்டியலில் நூபுர் ஷர்மா முதலிடத்தை பிடித்துள்ளார். பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபூர் சாரம், ஷர்மா, தொலைக்காட்சி விவாதத்தின் போது முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசி எதிர்ப்புகளை சந்தித்தார். திரௌபதி முர்மு, ரிஷி சுனக், லலித் மோடி, சுஷ்மிதா சென் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.