தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள “Mandous” புயல் சூறாவளியாக தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இதன் காரணமாக பலத்த மழை பெய்வதுடன் பலத்த காற்று வீசக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் புயல் காரணமாக மாசடைந்த காற்று துகள்கள் வளிமண்டலத்தில் கலப்பதனால் வளிமண்டலம் மேகமூட்டமாக காணப்படும். இதனால் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும். வெளியில் நடமாடுவதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (08) காலை முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மழை மேகமூட்டத்துடன் வானம் காணப்படுகின்றது.
இதனால், சாரதிகள் மிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.