முன்னாள் முதலமைச்சர் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டு உள்ளது. கட்சியின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை பிடிப்பதில்,
– எதிர்க்கட்சித் தலைவர்
இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை,
நடத்தினார். அதில், 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, அதே நாளில் அதே பொதுக்குழு மேடையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தார். இதுவரை நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைகளில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே சாதகமான உத்தரவுகள் வந்துள்ளன. இது ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், மனம் தளராத ஓ.பன்னீர்செல்வம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
இதற்கிடையே, ஜி – 20 மாநாடு கூட்டங்கள் தொடர்பாக அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதானக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், அதிமுக சார்பில்,
கலந்து கொண்டார்.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பிதழ் அனுப்பியது. அதிமுக தலைமை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக தலைமை அங்கீகரித்து மத்திய அரசு கடிதம் அனுப்பியதால், ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தி அடைந்தார். இது தொடர்பாக, அவர் மத்திய அரசுக்கு கடிதமும் எழுதினார்.
இந்நிலையில், விரைவில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை அவர் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அவர்களிடம், எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக அவர் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் குறித்த அறிவிப்பு, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.