மாண்டஸ் புயல் நாளை இரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் குறித்து பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், சூறாவளி வடக்கில் முகடுகளுடன் நன்றாக வெளியேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கில் இருந்து ஈரப்பதம் தொடர்வதால் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும் வட தமிழகத்திற்கு நாளை ஒரு பெரிய நாளாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்புகளைக் குறைத்து, இயற்கை நமக்குத் திட்டமிடப்பட்ட அனைத்தையும் அனுபவிப்போம் என தனது பேஸ்புக்கில் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
மேலும், புயல் சின்னம் கரையைக் கடக்கும் போது, மிகப்பெரிய மேகக் கூட்டங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. புயல் சின்னத்தின் மையப் பகுதியான மேகக் கூட்டங்கள் நம்மைக் கடக்கலாம் என்று தோன்றுகிறது. கடலூருக்குக் கீழே புயல் சின்னம் கரையைக் கடக்க வாய்ப்புகள் குறைவு என்று பதிவிட்டுள்ளார்.