புதுவீட்டு கிரகப்பிரவேசத்தில் கண்கலங்கிய யமுனா

சினிமா மற்றும் சின்னத்திரையில் ஆக்டிவாக நடித்து வரும் யமுனா சின்னதுரை இதுவரை 3 திரைப்படங்களிலும் 2 தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். இதில் ஜீ தமிழின் 'யாரடி நீ மோகினி' தொடரில் நடித்ததற்கு பின்பு தான் ஓரளவு பிரபலமாகி உள்ளார். இன்ஸ்டாகிராமில் சமீபகாலமாக போட்டோஷூட்கள், ரீல்ஸ் வீடியோக்கள் என ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் வேலையை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் புதிதாக கட்டியிருக்கும் வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்வானது அண்மையில் நடைபெற்றது. அந்த வீட்டின் ஒரு சிறு தனி அறையில் யமுனாவின் அப்பா உருவத்தை இடுப்பு உயர மெழுகுசிலையாக செய்தும், அவரது சில அரிதான புகைப்படங்களை கலக்ட் செய்தும் செண்டிமெண்டான சர்ப்ரைஸ் ஒன்றை யமுனாவின் கணவர் கொடுத்துள்ளார். அந்த அறையின் திரைச்சீலையை நீக்கி அப்பாவின் உருவத்தை பார்க்கும் யமுனா உணர்ச்சி வசத்தால் நெகிழ்ந்து கண்ணீர் வடிக்கிறார். இந்த வீடியோவை தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள யமுனா, கணவரின் காதலுக்கு நன்றி கூறியும், அப்பாவின் நினைத்தும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.