Thunivu: ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் அஜித்..கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் நடிகராக வலம் வருகின்றார் ரஜினி. கமர்ஷியல் படங்களாக தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த ரஜினி கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தவித்துவருகின்றார்.

குறிப்பாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தற்போது கட்டாய வெற்றியை எதிர்நோக்கி ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

Suriya: பாலாவால் சூர்யா இழந்த விஷயங்கள்..இனி இணைவது கஷ்டம் தான் போலயே..!

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரமாண்டமாக ஜெயிலர் படத்தை தயாரித்து வருகின்றது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்திலும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும் ரஜினி நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் தற்போது ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரஜினியின் கதை மற்றும் திரைக்கதையில் அவரே தயாரித்த பாபா திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் சில காரணங்களால் தோல்வியை சந்தித்தது.

இருந்தாலும் பல ரசிகர்களுக்கு பாபா திரைப்படம் விருப்பத்திற்குரிய படமாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ள பாபா திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. பல ரசிகர்கள் ஆவலாக இப்படத்தை மீண்டும் திரையரங்கில் பார்த்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தற்போது வந்த தகவலின் படி அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ஆழ்வார் திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது. அஜித் நடிப்பில் செல்லா இயக்கத்தில் வெளியான இப்படம் படுதோல்வியை சந்தித்தது.

அஜித் ரசிகர்களே இப்படத்தினால் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இப்படம் தற்போது ரீரிலீஸ் செய்யப்பட இருப்பதாக வந்த தகவலினால் பொதுவான ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் சில விஜய் ரசிகர்களும் இந்த தகவலினால் ஆழ்வார் திரைப்படத்தை ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

ஆனால் இது வெறும் வதந்திதான் என்றும், அஜித்தின் எந்த படமும் ரீரிலீஸ் செய்யும் திட்டமில்லை எனவும் ஒரு பக்கம் தகவல் வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.