26 வயதான அமெரிக்க ராப் பாடகர் யுங் கிரேவி என்ற மாத்யூ ரேமண்ட் ஹௌரி, 2017ஆம் ஆண்டு முதல் பிரபலமாக அறியப்படுகிறார். மூன்று ஆல்பம் பாடல்கள், 7 சர்வதேச இசை சுற்றுப்பயணம் என யுங் கிரேவி பல்வேறு வகையில் மக்களிடம் சென்றடைந்துள்ளார்.
இவரின் இசை நிகழ்ச்சிகளுக்கு ஆண் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகர்கள் அதிகமாக வருவார்கள். தற்போது, அவர் வித்தியாசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதாவது, அவரது இசை நிகழ்ச்சி மேடையை நோக்கி சுமார் 159 ப்ராக்கள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனை ஒரு சாதனை மைல்கள் என அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக, அவர் இதுகுறித்து கூறுகையில், “அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏறத்தாழ 159 பெண்களின் ப்ரா உள்ளாடையை நாங்கள் சேகரித்துள்ளோம்” என்றார். இதற்கு காரணம், அவர் முன்னதாக வெளியிட்டிருந்த டிக் டாக் வீடியோ ஒன்றுதான்.
மேலும் படிக்க | தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க பள்ளிகளில் ஆணுறைகளை இலவசமாக வழங்கும் திட்டம்!
— Father Gravy (@yunggravy) November 29, 2022
அதில், நிகழ்ச்சியின்போது, ரசிகர்கள் தங்கள் குழுவிடம் பிராக்களை கொடுத்தால், அதை மகளிர்கள் குடியிருப்பில் கொடுத்து, அது நிகராக நிதியை திரட்டி மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு அளிக்க உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். புற்றுநோய் சிகிச்சை என்பதால், பலரும் தன்னார்வமாக முன்வந்து நிகழ்ச்சிகளில் மேடையை நோக்கி தங்களின் பிராக்களை வீசி வருகின்றனர்.
அந்த டிக்டாக் வீடியோவில் ராப் பாடகர், உங்களின் பிரா என்ன விலை என்று கேட்க, அடுத்தடுத்து பிராக்கள் மேடையில் வந்துவிழுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இதுவரை யுங் கிரேவி குழுவினர் மொத்தம் 678 பிராக்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மினியோபோலிஸ் நிகழ்ச்சியில் மட்டும் 159 பிராக்கள் கிடைத்துள்ளது. கடந்த சில நாள்களில் மட்டும் அமெரிக்கா முழுவதும் மொத்தம் 9 இடங்களில் இசை நிகழ்ச்சியை நடத்திய அவர் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளார். ஆனால், இதுவரை எவ்வளவு நிதியை திரட்டியுள்ளார் என்ற விவரம் வெலியிடப்படவில்லை.
மேலும் படிக்க | ஒரே நாளில் 2 வயது இளமையாகும் தென் கொரிய மக்கள்! ஒரே இரவில் நடந்த அதிசயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ