லக்னோ: பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, உ.பி., காசியில் உள்ள அவரது உருவ சிலைக்கு, இன்று(டிச.,11) மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882 டிச., 11 ல் சின்னச்சாமி ஐயர் – லட்சுமி அம்மையார் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் மகாகவி பாரதியார். பெற்றோர் அவருக்கு இட்டபெயர் சுப்ரமணி. ஆனால் 11ஆவது வயதில் கவிபாடும் ஆற்றலினால், எட்டயபுரம் மன்னரால் பாரதி என்ற சிறப்புப் பெயர் பெற்றார். அன்று முதல் சுப்பிரமணிய பாரதி என அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, உ.பி., காசியில் உள்ள அவரது உருவ சிலைக்கு, இன்று(டிச.,11) மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்பு, வாரணாசியில் உள்ள பாரதியாரின் மருமகன் உறவுமுறை கொண்ட கே.வி. கிருஷ்ணன் வீட்டுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சென்றார். இதையடுத்து அவருக்கு பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார்.
பின்னர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறுிக்கையில் கூறியிருப்பதாவது: மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளான இன்று, காசியில் அவரது குடும்பத்தினரைச் சந்திக்கும் பேறு கிட்டியது. அவரது உறவினர் கே. வி. கிருஷ்ணனிடம் ஆசீர்வாதமும், ஊக்கமும் பெற்றதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement