பாரதியின் தொலைநோக்குப் பார்வைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறோம் – பிரதமர் மோடி ட்வீட்

மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதியார் பெருமைகளைப் புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுப்ரமணிய பாரதியார் பிறந்தநாளன்று அவரை நான் வணங்குகிறேன். துணிச்சலும், மதிநுட்பமும் நிறைந்தவர் பாரதியார். இந்தியாவின் வளர்ச்சி குறித்தும், ஒவ்வோர் இந்தியருக்கும் அதிகாரமளித்தல் குறித்தும் பாரதியார் பிரம்மாண்டமான தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தார். அவருடைய சிந்தனைகளை பல்துறைகளிலும் நினைவாக்க நாங்கள் முயன்று வருகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.


— Narendra Modi (@narendramodi) December 11, 2022

பாரதியார், ஐந்து வயதில் தாயை இழந்து, பதினைந்து வயதில் தந்தையை இழந்து, அத்தையின் உதவியோடு காசிக்குச் சென்று, வேதங்களையும் பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். கவிஞராக, இதழியலாளராக, விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளராக, யாருக்கும் அஞ்சாத்திறம் கொண்ட கொள்கையாளராக, தத்துவவாதியாக பல்வேறு பரிமாணங்களில் அறிவுக் கிளைபரப்பி நின்றார். அவருடைய 140 பிறந்தநாள் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.