மெட்ரோவில் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர்… மாணவர்களுடன் உரையாடினார்!

மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அவர் தொடங்கிவைக்கிறார்.  அந்த வகையில், முதல் கட்டமாக அமைக்கப்பட்டுள்ள நாக்பூர் மெட்ரோவின்  பிரதமர் மோடி இன்று (டிச. 11) நாட்டுக்கு அர்ப்பணிப்பதார். 

பின்னர், அதே மெட்ரோ ரயிலில் நாக்பூரின் ஃப்ரீடம் பார்க் முதல் காப்ரி வரை பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இரண்டு மெட்ரோ ரயில்களை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பிரதமர் மோடி தனது மெட்ரோ பயணத்தின் போது, மாணவ-மாணவிகளிடம் உரையாடும் வீடியோ அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

மெட்ரோவை கொடியசைத்து தொடங்கிவைத்த பிறகு, அவர் நாக்பூர் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டிகிறார். இது ₹6700 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டம் ₹8650 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் ஆறாவது வந்தே பாரத் ரயில், நாக்பூர் – பிலாஸ்பூர் நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. இதன் சேவையையும் பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். 

பிரதமர் மோடி நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். AIIMS நாக்பூர், ஜூலை 2017இல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. மத்திய அரசின் பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் கீழ் இது நிறுவப்பட்டது.

AIIMS நாக்பூர், 38 துறைகளுடன் கூடிய அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிக்கு நவீன மருத்துவ வசதிகளை வழங்க உள்ளது. அதைச் சுற்றியுள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளான கட்சிரோலி, கோண்டியா மற்றும் மேல்காட் ஆகியவற்றிற்கு ஒரு உதவிகரமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

நாக்பூரில் நடைபெறும் பொதுவிழாவில், நாக்பூர் ரயில் நிலையம் மற்றும் அஜ்னி ரயில் நிலையங்களை முறையே ₹590 கோடி மற்றும் ₹360 கோடி செலவில் மறுவடிவமைப்பு செய்ய பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். அரசு பராமரிப்புக் கிடங்கு, அஜ்னி (நாக்பூர்) மற்றும் நாக்பூரின் கோஹ்லி-நார்கெர் பகுதி-இடார்சி மூன்றாவது வரித் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.