தாய்மார்களுக்கு முன்னுதாரணம்… சர்வதேச விருதை வென்ற தமிழக பெண்!

திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாயான பெண்கள் அழகு துறையில் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி பலருக்கு எழுவது இயல்புதான். ஆனால், அதில் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த  உதாரணமாக திகழ்கிறார், பிளாரன்ஸ் ஹெலன் நளினி. திருமணமாகி இரு பெண்களுக்கு தாயான பிளாரன்ஸ் ஹெலன் நளினி இன்று சர்வதேச அழகி பட்டத்தை வென்றுள்ளார். 

சாதிப்பதற்கு வானமே எல்லை என்பதை போல் பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் சாதனை பயணம் நீண்டு கொண்டே செல்கிறது. சாதாரண நடுத்தர குடும்பத்தில் கோவையில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி இன்று தனது சாதனைகளால் இமாலய சிகரத்தின் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார்.

பன்முகம் கொண்ட ஆளுமை

வறுமை துயரத்தினால் இவரது பயணம் என்றுமே நின்றது இல்லை. மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர், யோகா பயிற்சியாளர் என பன்முக திறமையால் ஆளுமை கொண்ட  பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் சாதனை பயணம் கடல் கடந்தும் இந்தியாவின் பெயரை உச்சரிக்க வைத்துள்ளது. 

கடந்தாண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். மொத்தமாக 3 ஆயிரம் பேர் பங்கேற்ற போட்டியில் இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

அதில்,  தமிழகத்தில் இருந்து தேர்வானது பிளாரன்ஸ் ஹெலன் நளினி மட்டுமே. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில்  2021ஆம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தை அவர் வென்றார். அதேபோல், ‘கிளாமரஸ் அச்சீவர்’ என்ற துணைப் பிரிவிலும் பட்டத்தை வென்று அசத்தினார்.  இதோடு பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் வெற்றி நின்று விடவில்லை. தனது திறமையை உலமே அறிந்திட கடல் கடந்து பயணித்தார்.

மேலும் படிக்க | தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க பள்ளிகளில் ஆணுறைகளை இலவசமாக வழங்கும் திட்டம்!

சர்வதேச அளவில் சாதனை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற ‘திருமதி உலக அழகி போட்டி’-யில் இந்தியாவின் சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி  பங்கேற்றார். சுமார் 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் “Miss International world people’s Choice winner 2022” என்ற பட்டத்தை வென்றுள்ளார். 

14 வயது முதல் 60 வயது வரையிலான போட்டியாளர்களிடையே நடைபெற்ற போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி முதலிடம் பிடித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு கிடைத்துள்ளது.

தன்னுடைய வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ள பிளாரன்ஸ் ஹெலன் நளினி அடுத்ததாக நடைபெறும் சர்வதேச போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். இன்டர்னேஷ்னல் கிளாமர் புராஜெக்டில் இந்திய தூதுவராக தேர்வாகியுள்ளதாக கூறும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி, சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன் அவர்களை தேர்வு செய்யும் நடுவராகவும் செயல்படுவதாக கூறியுள்ளார். 

இதுமட்டிமின்றி, டிரீம் அன்ட் பிலீவ் ஃபவுன்டேஷனுடன் இணைந்து ஆர்.ஐ.டி. கல்வி மற்றும் குழந்தைகளுக்கான கட்டாய கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.  விழிப்புணர்வுடன் நிறுத்தி கொள்ளாமல் மாணவர்களின் கல்வி செலவுக்காக உலகம் முழுவதிலும் உள்ள 360 தன்னார்வலர்களிடம் ரூ. 7 லட்சம் ரூபாய் நிதி வசூலித்து கொடுத்துள்ளார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. 

நீளும் சேவைக்கரம்

உக்ரைன் போர் நெருக்கடிக்காக 250 பேரிடம் இருந்து 4,700 டாலர் அளவுக்கு நிதி வசூலித்து கொடுத்த பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் சேவை நீண்டு கொண்டே செல்கிறது. மிகவும் பின் தங்கிய கிராம புறங்களில் குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன்,  Women empowerment அமைப்பின் All ladies league பிரிவில் தமிழகத்திற்கான தலைவராக உள்ளார். 

அதன் மூலம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருக்கும் பெண்கள் முன்னேறுவதற்கான தொழிற்சார்ந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கி வருகிறார். பெண்களால் சாதிக்க முடியும் என்பதால் கிராமப்புற பெண்களுக்கும், பின் தங்கிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதே தனது இலக்கு என நெகிழ்ச்சியுடன் பிளாரன்ஸ் ஹெலன் நளினி கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ரசிகைகளிடம் பெற்ற 678 பிரா… உள்ளாடைகளை வாங்கும் ராப் பாடகர் – ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.