தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். தன்னம்பிக்கைக்கு பெயர்பெற்ற அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். நேர்கொண்டப்பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் அஜித்.
நேர்கொண்டப்பார்வை வெற்றிப்படமாக அமைய மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்னதான் இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படம் என சொன்னாலும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
Thunivu: ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் அஜித்..கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!
எனவே வலிமை திரைப்படத்தில் விட்டதை துணிவு படத்தில் பிடிக்க அஜித் திட்டமிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் துணிவு படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது.
இந்நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஜில்லா மற்றும் வீரம் படங்களுக்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே தினத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இந்நிலையில் சமூகத்தளங்களில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் கடுமையான மோதல்களில் இப்போவே ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தற்போது ஒரு வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகின்றது,
அஜித் பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யுடனான போட்டி பற்றி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, எனக்கும் நடிகர் விஜய்க்கும் எந்த மோதலும் இல்லை. எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியே உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.