காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை; பீகார் முதல்வர் உறுதி.!

பாஜகவுடனான கூட்டணி ஆட்சியை முறித்துக்கொண்டு தேஜஸ்வி யாதவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார். இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருள் ஆனது. பல்வேறு அரசியல் தலைவர்கள் நிதிஷ் குமாரை பாராட்டினார்கள். நிதிஷ் குமாரின் இந்த துணிச்சலான முடிவு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் முதல்வர் பதவியில் நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவி ஏற்றனர். இது பீகார் மட்டுமின்றி பல மாநில அரசியல் பிரமுகர்களை ஆச்சர்ய படவைத்தது.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும், பாஜக தனிமைப்படுத்த வேண்டும் எனவும், பாஜக ஒன்றும் வீழ்த்த முடியாத கட்சி இல்லை என்பதை பீகார் உதாரணம் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் சோனியா காந்தியை சந்தித்தது பேசு பொருளானாது. அதேபோல் தெலங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் பீகார் முதல்வரை சந்தித்து பேட்டி கொடுத்ததும், பாஜகவிற்கு அழுத்தத்தை கொடுத்தது.

இந்தநிலையில் பீகார் மாநிலத்தில் குர்கானி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி

நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் தேசிய அளவிலான 3ஆம் அணி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த ஜனதா தளம் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று பீகாரின் பாட்னாவில் நடைபெற்றது. அதில் அவர் பேசும்போது, ‘‘ வருகிற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் இல்லாத மூன்றாம் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.

வருகிற தேர்தலில் அமைக்கப்படும் தேர்தலில் அமைக்கப்படும் கூட்டணி தான் பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணியாக இருக்கும். அவ்வாறு பாஜகவை எதிர்க்கும் எதிர்கட்சியில் ஓரணியில் திரண்டால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மெகா வெற்றி அடையும் என்பது உறுதி.

ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்வு.!

நம்மளுடன் கூட்டணியில் இருந்த 2020 சட்டப்பேரவை தேர்தலில், நமது கட்சிக்கு எதிராக வேலை செய்தவர்கள் தான் பாஜகவினர் என்பதை மறக்கக்கூடாது. ஊடகங்கள் பாஜகவினரின் அழுத்தத்தால் பல உண்மைகளை மறைத்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படும் போது, ஊடகங்கள் மறைத்த உண்மைகள் வெளிகொண்டு வரப்படும். ஒன்றிய அரசு பீகாரை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. நமது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டோம். ஆனால் புறக்கணிக்கப்பட்டது. ஏழைகளை மேம்படுத்தாமல் இந்த நாடு வளர்ச்சி அடையாது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.