மாண்டஸ் புயல், மழைக்கு 25 ஆயிரம் நிவாரணம்? அடிச்சிவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்!

சென்னையை கொஞ்சம் புரட்டி போட்டுள்ள மாண்டஸ் புயல், மழை பாதிப்புகள் குறித்து காசிமேடு துறைமுகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

புயல் பாதிப்பு என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் முக்கியம். அதன் பிறகு புயலின் தாக்கத்தால் ஏற்படுகின்ற பாதிப்புகளை கண்டறிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு போடப்பட்டு, அந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையிலே நிவாரணங்களை வாரி வாரி வழங்கிய ஆட்சி அம்மாவின் ஆட்சி. அந்த அடிப்படையில்தான் எடப்பாடியார் ஆட்சிக் காலத்திலே காஜா புயல், ஒக்கி புயல்,வர்தா புயலால் பாதிக்கபட்ட மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த விடியா திமுக அரசைப் பொறுத்தவரையில் ஆட்சிக்கு வந்து 18 மாதத்திற்கு மேலாகிறது. எல்லோரும் இன்றைக்கு கஷ்டப்படுகிறார்கள்.விவசாயிகள்,தொழிலாளர்,நெசவாளிகள்,மீனவர்கள் என எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள். குறிப்பாக மீனவ சமுதாயம் முழுக்க,முழுக்க வஞ்சிக்கப்படுகின்ற நிலைதான் இந்த விடியா அரசில் இருக்கின்றது.

சென்னை காசிமேடு துறைமுகத்தை பொறுத்தவரையில் அம்மாவின் அரசில் சுபிஷ்டமாக இருந்தது. மீனவர்கள் நன்றாக சம்பாதிக்கும் நிலை இருந்தது. ஆனால் இப்போது படகை எடுக்க முடியவில்லை. விசைப்படகும் எடுக்க முடியவில்லை. இதனால் பொருளாதார ரீதியில் மீனவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!

மாண்டஸ் புயலின் விளைவாக மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளதால், அவர்களால் குறைந்தபட்சம் இன்னும் 10 நாட்களுக்கு தொழிலுக்கு போக முடியாது. அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் 20 நாட்களாவது ஆகும். அதுவரை அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மீனவர்கள் சங்கம் மூலமாக அவர்களுக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்க திமுக அரசு முன்வர வேண்டும்.

மீனவர்கள் இப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்க, நாட்டு மக்கள் நலமாக இருப்பதக முதல்வர் ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் பேசி வருகிறார். நாட்டு நடப்பே தெரியாத ஒரு முதலமைச்சராக தான் அவர் உள்ளார். அமைச்சர்கள், ,அதிகாரிகள் பேச்சைக் கேட்டு அவர் பேசி வருகிறார்.அமைச்சர்களிடம் மக்கள் எப்படி உள்ளார் என்று கேட்கிறார்அவர்களும் மக்கள் நன்றாக உள்ளார்கள் என்று சொல்கிறார்.

உடனே நானும் இதனை ஊடகத்தில் சொல்லிவிடுகிறேன் என்று சொல்லிவிடுகிறார். ஆனால் கள நிலவரம் என்ன என்று யோசிக்க வேண்டாமா? நாட்டு நடப்பை உணர்ந்தவர்கள் மட்டும்தான் நாட்டின் மன்னராக இருக்க முடியும்.முதலமைச்சராக இருக்க முடியும். இரண்டும் இல்லாத ஒரு பொம்மை முதலமைச்சர் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.

ஒரு புயலுக்கே தாங்க முடியாதபடி, மெரினாவில் மாறறுத்திறனாளிகளுக்கு நடைபாதை அமைத்து அவர்களை கொச்சைப்படுதத்தி உள்ளது திராவிட மாடல் அரசு என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.