பிக் பாஸ் 6 : பிக் பாஸில் இன்றைக்கு வெளியேறப் போகும் பெண் போட்டியாளர் இவர்தான்!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகத் தொடங்கி சரியாக இரண்டு மாதங்கள் கடந்திருக்கின்றன. அசிம், விக்ரமன், அமுதவாணன், கதிரவன், மணிகண்டன், ராம், ராபர்ட் மாஸ்டர், ஜி.பி.முத்து, ஏ.டி.கே. அசல் கோலார், ரச்சிதா, தனலட்சுமி, மகேஸ்வரி, ஆயிஷா, நிவா, ஷெரினா, ஜனனி, சாந்தி, ஷிவின் கணேசன், குயின்சி, என 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு மைனா நந்தினி இனைந்து கொள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை 21 ஆனது.

நிகழ்ச்சி தொடங்கிய சில தினங்களிலேயே ஜி.பி முத்து வெளியேறினார். சொந்தக் காரணங்களால் இவர் வெளியேறியதாகச் சொல்லப்பட்டது.

தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் நடந்த எவிக்‌ஷனில் சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள்.

பிக் பாஸ் போட்டியாளர்கள்

இந்நிலையில் நிகழ்ச்சியில் முதன் முறையாக டபுள் எவிக்‌ஷன் நடக்கும் எனக் கடந்த வாரம் கமல் அறிவித்திருந்தார். எனவே நேற்று நடந்த வார இறுதி எபிசோடின் ஷூட்டிங்கில் எந்த இருவர் வெளியேறப் போகிறார்கள் என்பது பிக் பாஸ் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

முன்னதாக இந்த வாரம் வெளியேற்றத்துக்கான நாமினேஷன் லிஸ்டில் அசீம், ஆயிஷா, ராம் உள்ளிட்டோர் இருந்தனர். இவர்களில் ரசிகர்களின் ஓட்டு அடிப்படையில் மிகவும் குறைவான ஓட்டுகளைப் பெற்று ராம் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டுள்ளார்.

ராமைப் பொறுத்த வரையில் ஆர்மபத்திலிருந்தே பெரிதாக ஈடுபாடு காட்டாதவர் போலவே அறியப்பட்டார். எனவே அவரது வெளியேற்றம் பிக் பாஸ் பிரியர்கள் எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது.

ஆயிஷா

இந்நிலையில் இன்று போட்டியில் இருந்து ஆயிஷா வெளியேறவுள்ளார். ’நன்றாகக் கண்டெட் தருவார்’ என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் ஆயிஷா ஆனால் அவராலும் இரண்டு மாதங்களுக்கு மேல் அந்த வீட்டில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆயிஷா வெளியேறும் எபிசோடு இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.