முத்து படத்தில் ரங்கநாயகி கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் தன்னைதான் அழைத்தார் என கூறியுள்ளார் நடிகை மதுவந்தி.
நடிகை மதுவந்திதமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் ஒய் ஜி மகேந்திரன். மேடை நாடக கலைஞராகவும் உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகலையும் ஆவார் ஒய் ஜி மகேந்திரன். இவரது மகள் மதுவந்தி. தனியார் பள்ளிக் கூடம் ஒன்றை நிர்வகித்து வரும் மதுவந்தி சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். தர்மதுரை, தாராள பிரபு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் மதுவந்தி.Blue Sattai Maran: காலாவதியான ‘பாபா’… வயசானவங்கதான் பாக்குறாங்க… மீண்டும் ரஜினியை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்!
மதுவந்தி கூறிய ரகசியம்அதோடு பாஜகவிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார் மதுவந்தி. ஜெமினி கணேசன் சாவித்திரி தம்பதியின் பேரன் அருண்குமாரை திருமணம் செய்துள்ளார் மதுவந்தி. மதுவந்தியின் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருவது வழக்கம். இந்நிலையில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு நடிகை மதுவந்தி அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படம் குறித்த ரகசியத்தை கூறி அதிர வைத்துள்ளார் மதுவந்தி.
ரங்கநாயகியா நடிக்க…அதாவது முத்து திரைப் படத்தில் மீனா நடித்த ரங்கநாயகி கதாப்பாத்திரத்தில் நடிக்க தனது சித்தப்பாவான நடிகர் ரஜினிகாந்த் தன்னைதான் அழைத்ததாக கூறியுள்ளார் மதுவந்தி. ஆனால் தனக்கு அப்போது வயது ரொம்பவே குறைவு என்பதால் தன்னால் நடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார் மதுவந்தி. மேலும் தனது கொள்கை காரணமாக தன்னை நடிக்க அழைக்க தயங்குகிறார்களா என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார் மதுவந்தி.கல்யாணத்துக்கு பிறகுதான் மகாலட்சுமிக்கு இப்படி நடக்குது!
பாட்டி கூடாதுனு சொல்லிட்டாங்கதனது கல்லூரி நாட்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்தது என்றும் ஆனால் தனது பாட்டி படிப்பை முடித்தப் பிறகுதான் நடிக்க செல்ல வேண்டும் என கூறி விட்டதால் அப்போது நடிக்க முடியாமல் போனது என்றும் தெரிவித்துள்ளார் நடிகை மதுவந்தி. நடிகை மதுவந்தியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Regina Cassandra: லவ் யூ பாப்பா… ரெஜினாவிடம் ப்ரபோஸ் செய்த மாநகரம் பட நடிகர்!
ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்மதுவந்தியின் இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் முத்து படத்தில் மீனாவுக்கு பதிலாக மதுவந்தி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என ட்ரோல் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் சிலர் நல்ல வேளை நீங்கள் நடிக்க வில்லை என்றும் இன்னும் சிலர் நாங்கள் தப்பித்தோம் என்றும் கமெண்ட் பதிவிட்டு மதுவந்தியை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.Nayanthara: அந்த வேலை மட்டுமில்ல.. தமிழ் சினிமாவில் இந்த வேலையும் செய்த நயன்தாரா!
முத்து திரைப்படம்ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான முத்து படத்தில் மீனா சரத்பாபு, ராதாரவி, சுபாஸ்ரீ, பொன்னம்பலம், வடிவேலு, செந்தில், ரகுவரன், காந்திமதி, டைகர் பிரபாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலிலும் பட்டையை கிளப்பியது.Pathaan: அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுவதை தீபிகா படுகோன் 30 நொடியில் செய்துவிட்டார்.. நக்கலடிக்கும் கஸ்தூரி!
வசூலில் சாதனைஇப்படம் மலையாளத்தில் மொகன்லால், நடிப்பில் வெளியான தென்மாவின் கொம்பேத் என்ற படத்தின் ரீமேக்தான். ஆனாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப படத்தின் திரைக்கதையை மாற்றி அமைத்து வெற்றி விழா கண்டார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். முத்து திரைப்படம் ஜப்பான், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூலை குவித்தது. முத்து திரைப்படம் தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. Director Bala: அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடைசி கடமையை கூட செய்யவிடல… பாலாவுக்கு வயிறு எரிந்து சாபம் விட்ட நடிகர்!