பிரியாணி, சமோசா; 2022-ல் மக்கள் ஸ்விக்கியில் வாங்கிய உணவுகளில் முதலிடம்!

ஒவ்வோர் ஆண்டும், ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி (Swiggy), மக்கள் தங்களிடம் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் பற்றிய தகவல்களை வெளியிடும். அந்த வகையில் இந்த 2022-ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளைப் பற்றிய தகவல்களை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது. 

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2022 -ல் அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது. ஒரு வினாடிக்கு 2.28 பிரியாணி ஆர்டர்களை பெற்றுள்ளதாகவும், ஒவ்வொரு நிமிடத்துக்கும் பிரியாணிக்காக 137 ஆர்டர்களை வழங்கியுள்ளதாகவும் ஸ்விக்கி கூறியுள்ளது. அதிகம் விற்பனையான உணவு வரிசையில், பிரியாணி தொடர்ந்து ஏழுமுறை முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2022 -ம் ஆண்டில் பிளாட்ஃபார்ம் உணவகங்களிலிருந்து இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்ததையும் முக்கியமாக குறிப்பிட்டுள்ளது.

ஸ்விக்கி அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்:

சிக்கன் பிரியாணி, மசாலா தோசை, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் ஃபிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி மற்றும் தந்தூரி சிக்கன் ஆகிய உணவுவகைகளுடன், இத்தாலிய பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமன் மற்றும் சுஷி போன்ற உணவுகளை ஆர்டர் செய்ததாகவும் கூறியுள்ளது.

பிரியாணி

ரவியோலி (இத்தாலியன்) மற்றும் பிபிம்பாப் (கொரியன்) ஆகியவை பிரபலமான விருப்பங்களாக வெளிப்பட்டதால் இந்தியர்கள் நிறைய வெளிநாட்டு உணவுவகைகளை ருசிக்க விரும்பியுள்ளனர். மேலும் இந்திய உணவைத் தவிர வெளிநாட்டு உணவுவகைகளையே அதிகம் விரும்பி வாங்கியுள்ளது வியப்பாக உள்ளது என ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

4 மில்லியன் சமோசா…

இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஸ்நாக்ஸ் பட்டியலில் சமோசா மொத்தம் 4 மில்லியன் ஆர்டர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

சமோசா

ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட முதல் 10 சிற்றுண்டிகள் வகைகள்:

சமோசா, பாப்கார்ன், பாவ் பாஜி, பிரஞ்சு பொரியல், பூண்டு பிரட்ஸ்டிக்ஸ், ஹாட் விங்ஸ், டகோ, கிளாசிக் ஸ்டஃப்டு பூண்டு ரொட்டி மற்றும் மிங்கிள்ஸ் பக்கெட் என்று ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

மேலும், குலாப் ஜாமூன் 2.7 மில்லியன் ஆர்டர்கள்,  ரஸ்மலாய் 1.6 மில்லியன் ஆர்டர்கள்,  சோகோ லாவா கேக் 1 மில்லியன் ஆர்டர்கள், ரஸ்குல்லா, சோகோசிப்ஸ் ஐஸ்கிரீம், அல்போன்சோ மேங்கோ ஐஸ்கிரீம், காஜு கட்லி, டெண்டர் தேங்காய் ஐஸ்கிரீம், டெத் பை சாக்லேட் மற்றும் ஹாட் சாக்லேட் ஃபட்ஜ் ஆகியவை ஆன்லைன் உணவு விநியோக சேவையில் அதிகம் விற்பனையாகியுள்ளதாக கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.