சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்படுகிறது என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார். ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்படுவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. 3 மாதத்துக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற வேண்டும் ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி எப்படி கணக்கிடப்பட்டு மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது என யாருக்கும் புரிவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.