Captain Vijayakanth: எலும்பும் தோலுமாய் இருக்கும் விஜயகாந்த்.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள்!

நடிகர் விஜயகாந்தின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர்.

கேப்டன் விஜயகாந்த்தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90, 2000களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்துள்ள விஜயகாந்த் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜயகாந்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்திற்கு பிறகே கேப்டன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார் விஜயகாந்த்.கல்யாணத்துக்கு பிறகுதான் மகாலட்சுமிக்கு இப்படி நடக்குது!
ஆக்ஷன் ஹீரோதமிழ் சினிமாவின் டாப் ஆக்ஷன் ஹீரோவான விஜயகாந்த், போலீஸ் கதாப்பாத்திரத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். போலீஸ் கேரக்டர்கள் விஜயகாந்துக்கு கச்சிதமாக பொருந்தும். விஜயகாந்த் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் விஜயகாந்த். நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் கடனில் சிக்கி தவித்த நடிகர் சங்கத்தையும் தூக்கி நிறுத்தினார்.Regina Cassandra: லவ் யூ பாப்பா… ரெஜினாவிடம் ப்ரபோஸ் செய்த மாநகரம் பட நடிகர்!
அரசியலிலும் வெற்றிஅரசியல் அடியெடுத்து வைத்த விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார். இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த விஜயகாந்த் தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் விஜயகாந்த். தொடர்ந்து வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் நடக்க முடியாமலும் பேச முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார்.Nayanthara: அந்த வேலை மட்டுமில்ல.. தமிழ் சினிமாவில் இந்த வேலையும் செய்த நயன்தாரா!
விரல்கள் அகற்றம்கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு காலில் இருந்த விரல்கள் அகற்றப்பட்டன. சுதந்திர தினத்தில் தனது அலுவலகத்தில் கொடியேற்ற வந்த விஜயகாந்த் கொடி கயிறை பிடித்து இழுக்க முடியாமலும், நிமிர்ந்து கூட பார்க்க முடியாமலும், தனது கண்ணாடியை கூட போட முடியாமலும் ரொம்பவே சிரமப்பட்டார். அவரது நிலையை பார்த்த அவரது தொண்டர்களும் ரசிகர்களும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.Pathaan: அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுவதை தீபிகா படுகோன் 30 நொடியில் செய்துவிட்டார்.. நக்கலடிக்கும் கஸ்தூரி!
விஜயகாந்த் போட்டோகடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்தின் போட்டோ ஒன்று வெளியானது. அதிலும் இப்படிதான் அடையாளமே தெரியாமல் இருந்தார் விஜயகாந்த். அதைப் பார்த்து ரசிகர்கள் தொண்டர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். விஜயகாந்தா இது என பலரும் கண்ணீர் விட்டனர். இந்நிலையில் விஜயகாந்தின் தற்போதைய போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.Director Bala: அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடைசி கடமையை கூட செய்யவிடல… பாலாவுக்கு வயிறு எரிந்து சாபம் விட்ட நடிகர்!
எலும்பும் தோலுமாய்அதாவது விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அந்தப் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் விஜயகாந்த் மிகவும் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய் உள்ளார். விஜயகாந்தின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கலங்கி வருகின்றனர். இல்லாதவர்களுக்கு வாரி வாரி அள்ளிக்கொடுத்த விஜயகாந்துக்கா இந்த நிலைமை என்றும் கலங்கி வருகின்றனர் ரசிகர்களும் தொண்டர்களும்.ஒரே போட்டோவில் பதிலடி கொடுத்த நயன்தாரா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.