'இது மக்களை வஞ்சிக்கும் செயல்' – ஆவின் நெய் விலை உயர்வு; டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: ஆவின் நெய் விலை ஒரே ஆண்டில் மூன்று முறை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்.

ஒரே ஆண்டில் மூன்று முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115/- வரை அதிகப்படுத்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுதான் முதல்வர் ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?” இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.