புதுடில்லி: தலைநகர் டில்லியில் விவசாயிகள் அமைப்பினர் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி அந்த சட்டத்தை வாபஸ் பெற வைத்தனர்.
இந்நிலையில் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு அனுமதி கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பாரதிய கிசான் சங்கம் சார்பில் ‘விவசாயிகள் கர்ஜனை’ என்ற பெயரில் டில்லி ராம்லீலா மைதானத்தல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement