சென்னை: சென்னை மண்ணடியில் என்ஐஏ அதிகாரிகள் என கூறி பணம் பறித்த வழக்கில் பாஜக நிர்வாகி உட்பட 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். டிசம்பர் 13ல் பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ள அப்துல்லா என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் என கூறி ரூ.20 லட்சம் பணத்தை பறித்த வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகி வேலு உட்பட 6 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.