திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே மீன்பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே நடந்த மோதலில் 2வீடுகள் சூறையாடப்பட்டன.
ஆண்டிக்குப்பம் மீனவ கிராமத்தில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கடந்த ஓராண்டாக பிரச்சனை நீடித்து வருகிறது. நேற்று இங்கு இரு தரப்பு மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கம்புகளாலும், கற்களாலும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் 2 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 4பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.