புதுடில்லி, நம் நாட்டில் இதுவரை 220 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்திய மருந்து நிறுவனங்களால் இரண்டு வகையான கொரானா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாக அரசின் சார்பில் செலுத்தப்பட்டன.
முதல் டோஸ், இரண்டாம் டோஸ், பூஸ்டர் டோஸ் என வகைப்படுத்தி மக்களுக்கு செலுத்தப்பட்டதில் உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்ததுடன் தொற்று எண்ணிக்கையும் சரிவடைந்தது.
இதன்படி, 2021ம் ஆண்டு அக்., 21 வரை 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. இது கடந்த ஜூலை 17ம் தேதியில் 200 கோடியை எட்டியது. 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி என்பது மகத்தான சாதனை என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
பல்வேறு முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட்டு நேற்று காலை வரை 220 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு புதிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம்தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement