அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி உக்ரைன் முன்னெடுத்த ஒரு ரகசிய திட்டம்: உக்கிர கோபத்தில் விளாடிமிர் புடின்


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முதன்மை தளபதிகளில் ஒருவரை படுகொலை செய்ய உக்ரைன் முன்னெடுத்த ரகசிய திட்டத்திற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய தளபதிகளை இழந்த ரஷ்யா

குறித்த விவகாரம் கசிந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்கிர கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
உக்ரைன் போரின் போது, துருப்புகளை முன் நின்று வழிநடத்திய பல முக்கிய தளபதிகளை ரஷ்யா இழந்துள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவின் முதன்மை தளபதிகளை ரகசிய திட்டத்தின் வாயிலாக படுகொலை செய்ய தங்களின் உதவியை உக்ரைன் நாடியதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி உக்ரைன் முன்னெடுத்த ஒரு ரகசிய திட்டம்: உக்கிர கோபத்தில் விளாடிமிர் புடின் | Despite Warning Ukraine Tried Kill Putin General

@getty

ஆனால் அப்படியான ஒருநடவடிக்கைக்கான காலகட்டம் இதுவல்ல என உக்ரைனுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

படுகொலை செய்ய வேண்டும் என உக்ரைன் இலக்கு வைத்த அந்த ரஷ்ய தளபதி Valery Gerasimov என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

தளபதி Valery Gerasimov

உக்ரைன் மீதான போரில் முக்கிய தளபதிகள் கொல்லப்படுவ்தற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்யும் பொருட்டு, போர்க்களத்திற்கு Valery Gerasimov செல்ல இருப்பதாக அமெரிக்காவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலை அமெரிக்கா உக்ரைனுக்கும் பகிர்ந்துள்ளது. ஆனால், ரஷ்யா உடனான ஒரு மோதலை விரும்பாத அமெரிக்கா, உக்ரைனின் அந்த ரகசிய திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி உக்ரைன் முன்னெடுத்த ஒரு ரகசிய திட்டம்: உக்கிர கோபத்தில் விளாடிமிர் புடின் | Despite Warning Ukraine Tried Kill Putin General

@Shutterstock

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் பெரும்பாலான போர் திட்டங்கள் அனைத்தும் தளபதி Valery Gerasimov வகுத்தது என்றே கூறப்படுகிறது.

இதன் பொருட்டு, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி தளபதி Valery Gerasimov தங்கியிருந்த பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் தாக்குதல் முன்னெடுத்தது.

உக்ரைன் முன்னெடுத்த தாக்குதல்

இதில் டசின் கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் Valery Gerasimov தப்பியதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, உக்ரைனில் சுமர் 100,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 300,000 வீரர்கள் மிக மோசமாக காயம்பட்டுள்ளதாகவும்,

அவர்களால் இனி போரிடவே முடியது எனவும், அவர்களில் ஆயிரக்கணக்கானோர் போர்க் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.