புதுடில்லி ‘இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு’ அண்மையில், ‘தனியார் சமூக சேவை மாநாடு மற்றும் விருதுகள் 2022’ என்ற விழாவை நடத்தியது.
இதில், கொரோனா தொற்றின் போது மேற்கொண்ட சேவைக்காக, டி.வி.எஸ்., நிறுவனத்தின் சமூக சேவை பிரிவான ‘ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளை’க்கு, ‘கொரோனாவுக்கு எதிரான போராட்டம்’ என்ற பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டு உள்ளது.இது குறித்து, ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளையின் தலைவர் ஸ்வரன் சிங் கூறியதாவது:
கொரோனா தொற்று காலத்தில் மாநில அரசுகளுடன் இணைந்து, 85 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய சேவைகளை, டி.வி.எஸ்., நிறுவனம் மக்களுக்கு வழங்கியது. முக்கிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை வழங்குவது மற்றும் கிருமி நாசினி தெளிப்பது என பல அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விருது, டி.வி.எஸ்., நிறுவனம், அதன் கூட்டாளிகள் மற்றும் அரசு ஆகியவற்றின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிக்கு கிடைத்த சான்றாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement