அச்சுறுத்தும் BF7 கொரோனா… மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!

உலக அளவில் உருமாறிய பிஎஃப் 7 வகை கொரோனா பரவலை தொடர்ந்து, இந்தியாவில் மத்திய, மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். கடந்த சில நாட்களில் சீனாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
ஒவ்வொரு நாளும் உலகளவில் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, தென் கொரியா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில்  கொரோனா அதிகரித்து வருகிறது.

image
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதிய நிலையில், நேற்று உயர்நிலை குழுவுடன் பிரதமர் மோடி கொரோனா பரவல் குறித்து கலந்து ஆலோசித்தார். அதை தொடர்ந்து, சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளுக்கு கொரோனா  பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் இன்று  ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த கூட்டத்தில் மீண்டும் தடுப்பூசி இருப்பை அதிகரிப்பது படுக்கை & ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் காணொளி காட்சி மூலமாக கலந்து கொள்ள இருக்கிறார்.
image
இதில் தமிழகத்தில் கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும், அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்புகள் குறித்தும், இதுவரை மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும், தமிழகத்தில் கொரோனா நிலவரம், தடுப்பூசி செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்க உள்ளார் என சொல்லப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.