உதயநிதி ஸ்டாலின் எந்த மதம்?; அவரே உடைத்த.. மகா ரகசியம்!

தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில்,

வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக மு.க.ஸ்டாலினும், 33 அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர்.

இதன் பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைச்சரவையில் துறைகள் மாற்றம் நடைபெற்ற போதிலும் அமைச்சரவை விரிவாக்கம் மட்டும் நடக்காமலேயே இருந்தது.

திமுக பதவியேற்றதும் கட்சியின் இளைஞரணி செயலாளர்

அமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதை பிரதிபலிக்கும் விதமாக உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று மூத்த அமைச்சர்கள் பேசி ஆனாலும் இந்த விவகாரத்தில் முதல்வர்

மவுனமாகவே இருந்து வந்தார்.

இதற்கிடையே திமுக உட்கட்சித் தேர்தல்கள் முடிந்து, இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வானார். இதையடுத்து அவரை அமைச்சர் பதவியில் அமர்த்தி பார்க்க வேண்டும் திமுக முடிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்து, ஆளுநர் மாளிகைக்கும் பரிந்துரை செய்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். அவரை கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.

முன்னதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலாளராக இருந்த அபூர்வா மாற்றப்பட்டு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ளுறை ஆணையராக பதவியில் இருந்த சீனியர் ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா செயலாளராக நியமிக்கப்பட்டார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதை அடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. திமுக வெற்றிக்காக உழைத்த எத்தனையோ முன்னோடிகள் இருப்பதாகவும், அவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருப்பதாகவும், குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அமைச்சர் ஆன சூட்டோடு சூடாக உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கும் விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மண்ணடி, பிரகாசம் சாலையில் உள்ள புனித தொன் போஸ்கோ பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடந்தது. விழாவில் திமுக சார்பில் 2,000 ஏழைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

விழாவில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏழைகளுக்கு புத்தாடைகள், உணவுப்பொருட்கள் மற்றும் கிறிஸ்மஸ் பரிசுகளை வழங்கினார்.

இதன் பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். நான் படித்தது தொன்போஸ்கோ பள்ளியில்தான். பட்டம் பெற்றது லயோலா கல்லூரி. நான் காதலித்து மணந்ததும் ஒரு கிறிஸ்தவ பெண்.

எனவே அந்த உரிமையில் தான் இங்கு வந்து பேசுகிறேன். நான் கிறிஸ்தவன் என்று சொல்வதும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அல்லேலூயா என்று கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து சொல்வதும் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது மகன் மு.க. ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர்கள் குடும்ப வாரிசும், அமைச்சருமாக இருக்கின்ற உதயநிதி ஸ்டாலின், ‘நான் ஒரு கிறிஸ்தவன்’ என கூறி இருப்பது தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.