வாஷிங்டன்: ஒளிரும் நட்சத்திரத்தின் ஆறு புள்ளிகளைக் கொண்ட புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டுள்ளது.
இந்த பரந்த அண்டத்தில் ‘NGC 7469’ விண்மீன் திரளில் மைய பகுதியில், அதாவது அதன் இதயப் பகுதியில் உள்ள நட்சத்திரத்தின் ஒளிரும் புகைப்படத்தைதான் தற்போது ஜேம்ஸ் வெப் பதிவு செய்து அனுப்புயுள்ளது. இப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட குறிப்பில், “விண்மீன் செயல்பாட்டில் உள்ள விண்மீன் கருவை கொண்டுள்ளது. இது மிகவும் பிரகாசமான மத்திய பகுதி. இது மையத்தில் விழும்போது தூசி மற்றும் வாயுவால் வெளிப்படும் ஒளி பிரகாசமாக மின்னுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் இன்னும் சில தினங்களில் வரும் நிலையில், நட்சத்திரத்தின் புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தெளிவாக பதிவு செய்துள்ளதற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (James Webb Space Telescope). இந்தத் தொலைநோக்கி, கடந்த 2021 ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்பு 15 லட்சம் கி.மீ. விண்ணில் பயணித்து, நிலைபெற்றது. ஆறு மாத காலமாக அ விஞ்ஞானிகளில் இடைவிடாத கூட்டுமுயற்சியால், ஜேம்ஸ் வெப்பிடமிருந்து பல்வேறு அதிசயமிக்க புகைப்படங்கள் வெளிவந்து கொண்டுள்ளன. இதுவரை SMACS 0723, தெற்கு வளைய நெபுலா,ஸ்டிபன்ஸ் குவின்டெட்,கரினா நெபுலா,வெளிகோள் – WASP-96 b. வியாழன் கோள் ஆகிய புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி வெளியிட்டிருந்தது.
விண்வெளி ஆராய்ச்சிகள் பற்றிய விமர்சனங்களுக்கு மத்தியில் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பியுள்ள இந்தப் படங்கள் பெரும் வரலாற்று நிகழ்வை நிகழ்த்தி வருகின்றன.