திறந்த பள்ளி என்ற ஓப்பன் மஸ்ஜித் திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலை பார்வையிடும் நிகழ்வு (22) நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.
இப்பள்ளிவாயல் பலஸ்தீனத்தில் உள்ள முஸ்லிம்களின் முதலாவது தொழுகை திசை (கிப்லா) அமைந்துள்ள அல் அக்ஸா பள்ளிவாசலை ஒத்த வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கள, தமிழ், சமூகங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் அரச அதிகாரிகள் என பலர் இன, மத பேதமின்றி, அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இப்பள்ளிவாயலைப் பார்வையிடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முஸ்லிம்களின் வணக்கம், கலை கலாச்சாரம், போன்ற பல் வேறு விடயங்கள் மற்றும் அவை தொடர்பான செயன்முறைகளுடன் விளக்கமளிக்கப்பட்டது.
புனித அல்குர்ஆன் மொழிபெயர்ப்பக்களும் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வழங்கப்பட்டன.
இதன் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன், காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர், மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் ஏ.குமராஸ்ரீ, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.டி.அன்சார், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மர்ச செல்வன், காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் . காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன் உட்பட சமய பிரமுகர்கள் இராணுவ உயரதிகாரிகள் அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூக பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
M M Fathima Nasriya
Web Writer