பஞ்சாப் அணி நிர்வாகத்தை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்!!

16ஆவது ஐபிஎல் போட்டி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியை ஒட்டி 85 வீரர்கள் தங்கள் அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனால் இன்று கேரள மாநிலம் கொச்சியில் மினி ஐ.பி.எல் ஏலம் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளிட்ட அனைத்து அணியின் நிர்வாகிகளும் பங்கேற்று தங்கள் அணிக்குத் தேவையான வீரர்களை தேர்வு செய்தனர்.

அந்த வகையில், பஞ்சாப் அணி இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை 18.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரரை இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் எடுப்பது இதுவே முதல்முறை.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு பஞ்சாப் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வாலை பஞ்சாப் கழட்டிவிட்டது. இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை 8.25 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.

இந்நிலையில், தங்கள் வேலை முடிந்தவுடன் வீரர்களை கைக்கழுவி விடுவார்கள் என பஞ்சாப் அணி நிர்வாகத்தை அந்த அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் விமர்சித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கெய்ல், பஞ்சாப் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட மயங்க் அகர்வால், அந்த அணிக்காக பல தியாகங்களை செய்துள்ளார் என்றார். இருப்பினும் அவர் அணியில் தக்க வைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது, அவர் ஒரு சிறப்பான அதிரடி ஆட்டக்காரர் என்றும் தெரிவித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.