இந்தியா ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தங்களுடைய கார்கள் மற்றும் எஸ்யூவி விலையை அதிகபட்சமாக 2-3 % வரை விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ஸ்கோடா கார்கள் விலை
பெரும்பாலான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கார் விலையை உயர்த்தி வரும் நிலையில் செக் குடியரசை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்கோடா இந்தியா நிறுவனமும் ஜனவரி 1, 2018 முதல் விலையை உயர்த்த உள்ளது.
ஸ்கோடா வெளியிட்டுள்ள அறிக்கையில், மாறிவரும் வணிகரீதியான மாற்றங்களுக்கு ஏற்பவும், உயர்ந்து வரும் ஸ்டீல், அலுமினியம மற்றும் காப்பர் ஆகிய உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு கார்கள் மற்றும் எஸ்யூவி விலையை 2 முதல் 3 சதவீதம் உயர்த்த உள்ளோம் என குறிப்பிட்டுள்ளது.
ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் கோடியாக் எஸ்யூவி, சூப்பர்ப், ஆக்டாவியா மற்றும் ரேபிட் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.