பணம் முக்கியமில்லை, அன்பு மட்டுமே போதும்: வருங்கால கணவர் வாங்கிய ரு.21 லட்சம் கடனை அடைத்து திருமணம் செய்து கொண்ட பெண்…!

பீஜிங்,

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரத்தைச் சேர்ந்த சொள என்ற பெண், தனது வருங்கால கணவராக ஹூ என்ற நபரை சந்தித்தார். சந்தித்த முதல் நாளே ஒருவருக்கொருவர் காதல் பற்றிக்கொண்டது.

மேலும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதற்கு முன்பாக ஒரு மாதத்திற்கு ஒருவரையொருவர் தொடர்ந்து பார்த்து காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

மணமகனின் குடும்பம் சார்பாக மணமகளுக்கு வழங்கும் ரூ 35 லட்சம் பணத்தை வாங்க மறுத்தது மட்டுமல்லாமல் தன் வருங்கால கணவரின் ரூ 21 லட்சம் கடணையும் அடைத்துள்ளார் சொள என்ற பெண். காதலில் பணம் முக்கியமில்லை என்றும், அவரது அன்பு மட்டுமே போது என கூறியுள்ளார்.

மேலும் தனது வருங்கால கணவர் தனது குடும்பத்திற்கு சரியானதைச் செய்வார் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

சொள தனக்குக் கடனாகக் கொடுத்த பணத்தை விரைவில் திருப்பித் தருவதாக வருங்கால கணவர் உறுதியளித்ததாகவும், அவளைக் கவனித்துக் கொள்ள கடினமாக உழைக்கப் போவதாகவும் அவர் கூறினார். இவர்களின் பெருந்தன்மையை பார்த்து சமூகதளவாசிகள் வியப்படைந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.