1980 கள் வரை ஒரு குடும்பத்தில் டஜன், அரை டஜன் கணக்கில் குழந்தைகள் பிறப்பது பெுரும்பாலான இந்திய குடும்பங்களில் சாகாரண விஷயமாகவே இருந்து வந்தது. ஆனாலும்கூட ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தையோ, இரட்டை குழந்தைகளோ பிறப்பதுதான் வழக்கம்.
அதன் பின்னர் 1990 களில் ‘ஒரு குடும்பம் இரண்டு குழந்தைகள்’ கான்செப்ட் நாட்டில் வேகமா பரவ தொடங்கியது. இந்த மனநிலையில் தற்போது ‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ என்ற நிலைக்கு வந்து நின்றுள்ளது. அந்த அளவுக்கு குழந்தை பெற்று கொள்வதில் இன்றைய இளம்பெண்களுக்கு அவ்வளவு பயம் இருந்து வருகிறது. அத்துடன் அதிகரித்துவரும் குறைபிரசவங்கள் போன்றவற்றை பார்க்கும்போது உடல் அளவிலும் இன்றைய நவநாகரிக பெண்கள் பிள்ளை பேறு பெறுவதற்கான தகுதியுடன் இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழதான் செய்கிறது.
இத்தகைய சூழலில், ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந் 26 வயதே ஆன பெண் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்று அசத்தி உள்ளதுடன், கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
‘நீங்கள் செய்வது தானம் அல்ல முதலீடு’ – அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியை சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே – அப்தெல் காதர் அபி, தம்பதிக்கு, மொராக்கோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு (2021) தொடக்கத்தில் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களில் 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள்.
குழந்தைகள் பிறந்து கிட்டதட்ட 20 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை மருத்துவமனையிலேயே வைத்து சிறப்பு மருத்துவ குழுவினரால் மாதக்கணக்கில் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்த வந்த தாயும், அவரின் ஒன்பது குழந்தைகளும், தற்போது மருத்துவமனையின் ஒப்புதலுடன் மாலிக்கு திரும்பி உள்ளனர்.
‘most children delivered in a single birth to survive’ எனக் கூறி, த ஹலிமா சிஸ்ஸே – அப்தெல் காதர் அபி தம்பதியின் குடும்பத்தை கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்து, இத்தம்பதியை தங்களது சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்துள்ளது.
நண்பர்களுக்கு பாஸ்வேர்ட் ஷேர் பண்ணா கிரிமினல் வழக்கு; நெட்ஃபிளிக்ஸ் அதிரடி.!
நடாலி சுலேமான் என்ற பெண்மணி, கடந்த 2009 இல் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றிருத்ததே இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை 12 ஆண்டுகளுக்கு பிறகு முறியடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஹலிமா சிஸ்ஸே.
இதுகுறித்து மொரோக்கோ மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, “ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகள் பிறப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. அப்படிப் பிறக்கும் குழந்தைகள் சில மணி நேரங்களிலேயே இறந்து விடவும் கூடும். இந்த வகை பிரசவத்தில் தாய் – சேய்க்கு ஆபத்துகள் அதிகம் இருக்கும் என்பதால், ஒன்பது குழந்தைகளும் மாதக்கணக்கில் கிளினிக்கிலேயே வைத்துக் கண்காணிக்கப்பட்டு வந்தன” என்று கூறியுள்ளனர மருத்துவர்கள்.