பாரிஸில் குர்திஷ்கள் கொடூர தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்! கொந்தளித்த ஜனாதிபதி மேக்ரான்


பிரான்சின் பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மூவர் பலியான சம்பவம்

குர்திஷ் கலாச்சார மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தலைநகர் பாரிஸில் குர்திஷ் சமூக மக்கள் நீதி கேட்டு திரண்டதில் மோதல்கள் வெடித்தன.

பாரிஸில் குர்திஷ்கள் கொடூர தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்! கொந்தளித்த ஜனாதிபதி மேக்ரான் | Macron Tweet Paris Mass Shooting

@ Lewis Joly/AP/REX/Shutterstock

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக 69 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். கிறிஸ்துமஸ் வார இறுதிக்கு முன்னதாக பாரிஸ் பண்டிகைக் கொண்டாட்டத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால், அருகில் வசிக்கும் வணிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பாரிஸில் குர்திஷ்கள் கொடூர தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்! கொந்தளித்த ஜனாதிபதி மேக்ரான் | Macron Tweet Paris Mass Shooting

@LEWIS JOLY / AP

மேக்ரானின் பதிவு

இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், ‘பாரிஸ் நகரின் மையப்பகுதியில் பிரான்ஸ் நாட்டின் குர்திஷ்கள் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கும் எங்கள் எண்ணங்கள் போய் சேரும்.

எங்களின் சட்ட அமலாக்கம் அவர்களின் தைரியம் மற்றும் அமைதிக்கான அங்கீகாரத்தை நிலைநிறுத்தும்’ என தெரிவித்துள்ளார். 

இமானுவல் மேக்ரான்/Emmanuel Macron

@Associated Press

பாரிஸில் குர்திஷ்கள் கொடூர தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்! கொந்தளித்த ஜனாதிபதி மேக்ரான் | Macron Tweet Paris Mass Shooting

@Reuters  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.