சிறிய ரக ரெனோ க்விட் காரின் தொடக்க நிலை வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து தொடர்ந்து வெற்றியை தக்கவைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. ரெனோ க்விட் வெற்றி தொடருமா ?
க்விட் வெற்றி குறித்து இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசூகி சேர்மேன் R C Bhargava எக்கனாமிக் டைம்ஸ் இதழுக்கு அறித்துள்ள பேட்டியில் கூறியதாவது
சிறிய கார் சந்தையில் இந்த வெற்றியை தொடர்வது மிக கடினமான ஒன்றாகும். அதாவது நாடு முழுவதும் மிக வலுவான சர்வீஸ் நெட்வொர்க்கினை கொண்டுள்ள மாருதி நிறுவனம் மிக கடுமையாக போராட வேண்டியுள்ளது.
எனவே ரெனால்ட் க்விட் வெற்றியை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ள ரெனோ நிறுவனம் மிக அதிகமாகவும் சிறப்பாகவும் சர்வீஸ் நெட்வொர்கினை மேம்படுத்தப்பட வேண்டியது மிக அவசியமாகும்.
அடுத்த இரண்டு வருட காலத்தில் கட்டாயம் மேம்படுத்த வேண்டியிருக்கும் விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் பொருத்தே வெற்றி தொடரும் என தெரிவித்துள்ளார். 98 சதவீத பொருட்கள் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டுள்ள க்விட் நீண்ட கால வெற்றிக்கு சான்றாக அமையும்.
க்விட் காரில் 800சிசி பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிக சவாலான விலையில் ஆல்ட்டோ 800 , இயான் போன்ற கார்களுடன் போட்டியை எதிர்கொள்கின்றது. விற்பனைக்கு வந்த சில மாதங்களிலே 75,000 முன்பதிவுகளை கடந்துள்ளது. மேலும் புதிய ரெனோ ஏஎம்டி மற்றும் 1.0 லிட்டர் என்ஜின் ஆப்ஷனிலும் வரவுள்ளது.
க்விட் வெற்றி தொடருமா ? உங்கள் கருத்து என்ன கமென்டில் பதிவு செய்யுங்கள் ?