JEE தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு JEE தேர்வு நடத்தப்படுகிறது. தற்பொழுது இந்த நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்ற முறையில் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில் அவர்களது மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டு இருக்காது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளதால், தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
எனவே மாணவர்கள் கோரிக்கைக்கு இணங்க அரசு தேர்வுகள் துறை மூலமாக தேசிய தேர்வு முகமைக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இது குறித்து எம்பி சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “JEE 2023 விண்ணப்பம் படிவம் பூர்த்தி செய்யும் நடைமுறை துவங்கப்பட்டுள்ளது. இதில் 2020- 21 இல் 10 ஆம் வகுப்பு முடித்த தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பம் செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் இதனால் தவிப்பிற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்கள்.
2020 – 21 கல்வியாண்டில் கோவிட் காரணமாக பொதுத் தேர்வுகளை நடத்த இயலாததால் “எல்லோரும் தேர்வு” (All Pass) என்ற முடிவு தமிழக அரசால் எடுக்கப்பட்டது. ஆகவே மதிப்பெண் அட்டையில் “தேர்வு” (Pass) என்று மட்டுமே பதிவாகி இருக்கும்.
தற்போது JEE 2023 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சம்பந்தப்பட்ட விவரங்கள் இணைய தள படிவத்தில் கேட்கப்பட்டுள்ளது. இநஞமதிப்பெண் குறிப்பிடப் படவில்லையென்றால் விண்ணப்பம் பதிவாக மறுக்கிறது. இதனால் லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே உடனடியாக மத்திய கல்வி அமைச்சகம் தலையிட்டு இப்பிரச்சினையை சரி செய்து தீர்வு வழங்க வேண்டுமென்று கோரி மாண்புமிகு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களிடம் கடிதம் ஒன்றை அளித்து நேரில் வலியுறுத்தினேன். இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தமிழக மாணவர்களுக்கு தீர்வு வழங்குவதாக அமைச்சர் வாக்குறுதி தந்தார்.