நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே சுய உதவி குழு பெண்களின் பெயரில் ரூ.70 லட்சம் வரை மோசடி செய்து தலைமறைவான பெண் குறித்து எஸ்.பி.யிடம் புத்தேரியை சேர்ந்த ஏராளமான பெண்கள் புகார் அளித்தனர். மனுவில், மகளிர் சுய உதவி குழுவில் உள்ள நாங்கள் அவ்வப்போது சிறு சிறு கடன் தொகைகளை வாங்கி உரிய முறையில் செலுத்துகிறோம்.
இந்நிலையில் எங்களை மகளிர் சுய உதவி குழுக்களில் இணைத்து கடன் வாங்கி தர உதவிய பெண் ஒருவர் எங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வைத்து 70 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி விட்டு தற்போது தலைமறைவாகி விட்டார்.
எங்களை தனியார் ஊழியர்கள் மிரட்டுகிறார்கள். சம்பந்தப்பட்ட பெண்ணை கண்டறிந்து மோசடி செய்த பணத்தை மீட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர். போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.