புதிய சூப்பர் பைக்குகள் – 2016

வரும் 2016யில் வரவுள்ள புத்தம் புதிய சூப்பர் பைக்குகள் பற்றி முக்கிய விவரங்கள் , எதிர்பார்க்கும் விலை மற்றும் வருகை எப்பொழுது போன்றவற்றை நாம் தெரிந்துகொள்ளலாம்.

இந்திய சாலையில் தொடர்ந்து சூப்பர் பைக்குகளின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சூப்பர் பைக்குகளின் வருகைக்கு காரணம் வாங்குபவர்களின்  எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து வருவதே காரணமாகும். 10 லட்சத்துக்கு மேற்பட்ட விலையுள்ள சூப்பர் பைக்குகள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளன.

  1. டுகாட்டி பனிகேல் 959

டுகாட்டி பனிகேல் 899 பைக்கிற்கு மாற்றாக வரவுள்ள பனிகேல் 959 பைக்கில் 157ஹெச்பி ஆற்றலை வழங்கும் 955சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் . மிக நேர்த்தியான ஸ்டைலிங் , சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய சிறந்த பைக்காகும்.

2016-Ducati-959-Panigale

வருகை: ஜூன் 2016

விலை:  15 லட்சம்

2. யமஹா ஆர்1 எஸ்

யமஹா ஆர் 1 பைக்கின் பேஸ் மாடலை கொண்டு வசதிகள் குறைக்கப்பட்ட யமஹா ஆர் 1எஸ் பைக்கில் 198பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 998சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

yamaha-r1s

வருகை: இறுதி 2016

விலை:  21 லட்சம்

3.  இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி

இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி பைக்கில் சிறிய 999சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 78 ஹெச்பி ஆற்றல் மற்றும் 88.8என்எம் டார்க் வெளிப்படுத்தும் வி ட்வீன் 999சிசி லிக்யூடு கூல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2016-indian-scout-sixty

வருகை: ஏப்ரல் 2016

விலை:  9 லட்சம்

4.  ட்ரையம்ப் போனிவில் ரேஞ்ச்

மேம்படுத்தப்பட்ட அனைத்து போனிவில் வரிசை பைக்குகளும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதை ட்ரையம்ப் உறுதி செய்துள்ளது.

triumph-bonnevile-range-bikes

ட்ரையம்ப் போனிவில் T120

ட்ரையம்ப் போனிவில் T120 Black

ட்ரையம்ப் போனிவில் டரக்ஸ்டான்

ட்ரையம்ப் போனிவில் ஸ்டீரிட் ட்வின்

ட்ரையம்ப் போனிவில் டரக்ஸ்டான் R

என மொத்தம் 5 பைக்குகளும் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

வருகை – பிப்ரவரி 2016

5. ட்ரையம்ப் டைகர் எக்ஸ்புளோரர்

மேம்படுத்தப்பட்ட 2016 ட்ரையம்ப் டைகர் எக்ஸ்புளோர் பைக் புதிய டிசைன் , புதுப்பிக்கப்பட்ட மெக்கானிக் அம்சங்களுடன் இரு விதமான வேரியண்டில் வந்துள்ளது. இதில்1215சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2016-Triumph-Tiger-Explorer

வருகை: ஜூன் 2016

விலை ; 21 லட்சம்

6. கவாஸாகி ZX-10R

சிறப்பான ஸ்டைலிங் தோற்றத்துடன் அசத்தலான பாடி கிராஃபிக்ஸ் கொண்டுள்ள கவாஸாகி ZX-10R  பைக்கில் 210 குதிரைதிறன் ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

kawasaki-zx-10r-superbike

வருகை ; இறுதி 2016

விலை 19 லட்சம்

7. டுகாட்டி மான்ஸ்டர் 1200ஆர்

புதிய டுகாட்டி மான்ஸ்டர் 1200R பைக்கில் 160ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1198சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ducati-MONSTER-1200R

வருகை ; அக்டோபர் 2016

விலை ; 32 லட்சம்

8. யமஹா MT-10

ஆர்1 பைக்கின் தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள எம்டி 10 பைக் சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலுடன் கூடிய செயல்திறனை வெளிப்படுத்தும் நேக்டு ஸ்டீரிட் ஃபைட்டர் மாடலாகும்.

2016-Yamaha-MT-10

வருகை ; நவம்பர் 2016

விலை ; ரூ.18 லட்சம்

9. கேடிஎம் 1290 அட்வென்ச்சர்

கேடிஎம் 1290 அட்வென்ச்சர் பைக் மாடல் சிறப்பான ஸ்டைலிங்குடன் பல நவீன அம்சங்களை கொண்ட மாடலாகவும் சவாலான பைக்காகவும் விளங்கும்.

KTM-1290-Super-Adventure

வருகை ; நவம்பர் 2016

விலை ; ரூ.17 லட்சம்

10. டுகாட்டி எக்ஸ்டியாவேல்

பவர்ஃபுல்லான என்ஜினுடன் மிகவும் செயல்திறன் மிக்க மாடலாக டுகாட்டி எக்ஸ்டியாவேல் வரவுள்ளது. இதில் 156 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1262சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ducati-xdiavel

வருகை ; இறுதி 2016

விலை ; ரூ.16 லட்சம்

 

உங்களுக்கு பிடிச்ச பைக் எது கமென்ட் பன்னுங்க….

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.