கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சாரதி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, “மனித உரிமை மீறலில் போலீசார் ஈடுபடுவதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், “சிறு தவறுகளுக்காக போலீசாருக்கு எதிராக எடுத்த ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், பொது மக்களுக்கு தான் ஆபத்து.
ஆகவே, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, இன்று உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய முதல் அமர்வின் முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பணி தொடர்பான விவகாரங்களில், பொது நல வழக்கு எப்படி தொடர முடியும்?’ என்று கேள்வி எழுப்பிய முதல் அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.