புதுடெல்லி: விமானங்களில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு அதற்கு குறைந்த கட்டண பிரிவில் சீட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பயணிகளின் விருப்பம் இல்லாமல் இது போன்று நடப்பதாக சிவில் விமான போக்குவரத்து துறைக்குபல புகார்கள் வந்தன.
இந்நிலையில், விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு, விமானம் ரத்து, தாமதம் உள்ளிட்டவை தொடர்பான விதிகளில் திருத்தம் கொண்டு வர விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. பயணிகளின் விருப்பம் இல்லாமல் குறைந்த கட்டண சீட் ஒதுக்கப்பட்டால், டிக்கெட் வரி உள்பட முழு கட்டணம், அதற்கு அடுத்த வகுப்பில் இலவசமாக பயணிக்க சலுகை வழங்க உத்தரவிட ஆலோசித்து வருகிறது.